search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை வளசரவாக்கம்"

    சென்னை வளசரவாக்கத்தில் போலீஸ்காரர் மீது ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக டி.வி.நடிகை கீதா புகார் அளித்துள்ளார்.
    போரூர்:

    சென்னை வளசரவாக்கம் எஸ்.வி.எஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சின்னத்திரை நடிகை கீதா.

    கடந்த மாதம் தனது வீட்டின் முன்பு உள்ள மழை நீர் கால்வாயில் மர்ம நபர்கள் போட்டு சென்ற பச்சிளம் குழந்தையை காப்பாற்றியவர்.

    இந்த நிலையில் டி.வி. நடிகை மீது எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எனது மகள் ஷாலினியுடன் வளசரவாக்கத்தில் வசித்து வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு தலைமை காவலர் மாரிமுத்து அறிமுகமானார்.

    என்னிடம் நெருங்கி பழகிய மாரிமுத்து சிறுக சிறுக என்னிடம் இருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றார். கடந்த 6 மாதங்களாக பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வந்த அவர் தலைமறைவாகி விட்டார்.

    இந்நிலையில் அவரை நேற்று முன்தினம் எம்ஜிஆர் நகர் மார்கெட்டில் பார்த்து பணம் கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசி என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எம்.ஜி.ஆர். நகர் போலீசார் பண மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவலர் மாரிமுத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாரிமுத்து விருகம்பாக்கம், பாண்டி பஜார் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்ததும் பல்வேறு புகாரில் சிக்கிய அவர் தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    மழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுவதாக சின்னத்திரை நடிகை கீதா தெரிவித்துள்ளார். #Suthanthiram
    போரூர்:

    வளசரவாக்கம் எஸ்.வி. எஸ். நகர் 6-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள தரைதள வீட்டில் சின்னத்திரை நடிகையான கீதா வசித்து வருகிறார்.

    நேற்று காலை குடியிருப்பு முன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தை அழுதபடி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    குழந்தை கிடந்த கால் வாயின் மேற்பகுதி சிமெண்ட் சிலாப்பால் மூடப் பட்டு இருந்தது. இதனால் குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. சின்னத்திரை நடிகை கீதா தரையில் படித்தபடி அங்கு இருந்த ஆண் குழந்தையை மீட்டார்.

    குழந்தையின் கழுத்தில் அதன் தொப்புள் கொடி சுற்றியபடி காணப்பட்டது. பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை பெற்றோர் வீசி சென்றிருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து குழந்தையை நடிகை கீதா வெந்நீரில் குளிப்பாட்டி முதலுதவி செய்தார். இதுபற்றி அறிந்ததும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.


    சுதந்திர தினத்தில் குழந்தை மீட்கப்பட்டதால் அதற்கு ‘சுதந்திரம்’ என்று நடிகை கீதாவும், பொது மக்களும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

    தற்போது அந்த குழந்தை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தை நலமாக இருக்கிறது.

    குழந்தையை மீட்டது குறித்து நடிகை கீதாவிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

    இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 7 வருடங்களாக மகள் ஷாலினியுடன் வசித்து வருகிறேன். நான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தேன். தற்போது வாய்ப்பு ஏதும் இல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறேன்.

    நேற்று காலை 8 மணி அளவில் வழக்கம் போல் எங்கள் வீட்டிற்கு தினமும் பால் போடுபவர் வந்தார். அவர் வீட்டின் முன்பு உள்ள மழை நீர் கால்வாயில் இருந்து ஏதோ குழந்தை அழுகுரல் கேட்பதாக என்னிடம் கூறினார்.

    உடனடியாக நான் வெளியே ஓடி வந்து பார்த்தேன். இதற்குள் அங்கு அக்கம் பக்கத்தில் வசித்து வருபவர்கள் ஏராளமானோர் கூடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

    அங்கிருந்த யாரும் கால்வாயில் கிடந்த குழந்தையை எடுக்க முன் வரவில்லை. உடனடியாக நான் அந்த குழந்தையை மீட்டு தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டினேன்.

    நல்ல வேளையாக கால்வாயில் தண்ணீர் ஓட்டம் இல்லாததால் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இல்லையென்றால் குழந்தை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிற்கும்.

    அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த ஆண் குழந்தைக்கு சுதந்திரம் என்று நான் பெயர் சூட்டினேன். மேலும் எனது மகளுக்கு திருமணம் ஆகி கடந்த 7 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை.

    எனவே இந்த குழந்தை எங்களுக்கு கிடைக்குமேயானால் அதை நல்ல முறையில் வளர்ப்பதற்கு நானும் எனது மகளும் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Suthanthiram
    சென்னை வளசரவாக்கத்தில் மழைநீர் கால்வாயில் அனாதையாக கிடந்த குழந்தையை மீட்ட நடிகை அக்குழந்தைக்கு சுதந்திரம் என்று பெயர் சூட்டினார். #Suthanthiram
    போரூர்:

    வளசரவாக்கம் எஸ்.வி. எஸ். நகர் 6-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள தரைதள வீட்டில் சின்னத்திரை நடிகையான கீதா வசித்து வருகிறார்.

    நேற்று காலை குடியிருப்பு முன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தை அழுதபடி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    குழந்தை கிடந்த கால்வாயின் மேற்பகுதி சிமெண்ட் சிலாப்பால் மூடப்பட்டு இருந்தது. இதனால் குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. சின்னத்திரை நடிகை கீதா தரையில் படித்தபடி அங்கு இருந்த ஆண் குழந்தையை மீட்டார்.


    குழந்தையின் கழுத்தில் அதன் தொப்புள் கொடி சுற்றியபடி காணப்பட்டது. பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை பெற்றோர் வீசி சென்றிருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து குழந்தையை நடிகை கீதா வெந்நீரில் குளிப்பாட்டி முதலுதவி செய்தார். இதுபற்றி அறிந்ததும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

    சுதந்திர தினத்தில் குழந்தை மீட்கப்பட்டதால் அதற்கு ‘சுதந்திரம்’ என்று நடிகை கீதாவும், பொதுமக்களும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

    தற்போது அந்த குழந்தை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தை நலமாக இருக்கிறது.

    நேற்று மாலை குழந்தையின் உடல்நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று கேட்டறிந்தார்.

    குழந்தை வீசப்பட்ட கால்வாய் அருகே உள்ள வீட்டில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அதனை வளசரவாக்கம் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், குழந்தை வீசப்படும் நேரத்தில் பெரிய வேன் ஒன்று கால்வாயை மறைத்தப்படி வந்து நிற்கிறது.


    சிறிது நேரத்தில் அந்த வேன் சென்ற பிறகே அங்கு குழந்தை வீசப்பட்டிருப்பது தெரிந்தது. எனவே குழந்தையை வீசுவதற்காகவே கேமராவை மறைத்து வேன் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த வேன் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

    மேலும் குழந்தையின் பெற்றோர் யார்? எதற்காக குழந்தையை வீசினர். கடத்தப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை குழந்தையின் பெற்றோர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. #Suthanthiram
    ×